கண்கள் காண்பதெல்லாம்...
இதயம் உள் எடுப்பதில்லை...
இருந்தும்...
நீ என் இதயம் சென்றவள்...!
என்னையே அறியாமல்
என் மனதில் குடிகொன்டுவிட்டாயடி...!
கண்ணுக்குள் கண்ணாய் உள்ளம் புகுந்தாய்...
உள்ளத்தை கீறிக்கிழித்து விளையாடுகிறாய்...
உறவாக வந்தாய்...
உறையாடிவிட்டு மட்டும் செல்லாமல்...
உயிருள்ளவரை உன்னை தேடுகிறது என் மனம்...!
கண்கள் இமைக்க மறுப்பதில்லை... - அது போல்
என் நினைவுகள் உன்னை விட்டு விலகுவதுமில்லை...
உன் பேச்சு என்னிடம் நின்றிடும் வேளையில்...
என் மூச்சும் நின்று போக
என் உயிரிடம் வேண்டுகோள் விடுகின்றேன்...!
மனதில் திடம் கொண்டவள் நீ...
என் உறவை விபரிக்க வார்தைகள் இல்லை என்னிடம்...!
காலம் முழுவதும் நீ என்னுள் வேண்டும்...!
Saturday, November 8, 2008
இதயத்தின் உலறல்கள்...
Saturday, April 19, 2008
ஒரு நாள் இரவில்...
தூக்கம் இன்றி நான் தவித்த போது...
உன்னுடன் கூவிக் குலாவிய நேரங்கள்
எனை கொன்று குவிக்குதடி இரவிரவாய்...
நாற்பட்ட நோயை குணமாக்க
நாளாந்தம் உன் நினைவுகளையே
அருந்துகிறேன் பினி தீர்க்கும் மருந்தாய்...
வந்ததோ சில காலம்
வாடுகின்றேனடி ஏதோ பல காலம் போல்...
கண்டவுடன் கட்டியனைத்தவளே
உன்னை கண்டவுடன் என் கண்கள் மூடிக்கிடந்தேன்...
வெட்கம் என்ற ஒன்று ஆணுக்கும் உண்டு என
உன்னைப் பார்த்து தான் நான் அறிந்து கொன்டேன்..
ஆயிரம் ஆயிரம் கதை பேசியிருப்போம் அன்று
கதை பேசிய உதடுகளின் பாஷை
நேரில் நான் கண்டறிந்தேன் இன்று...
முத்தம் என்ற சொல்லை
நம் உதடுகள் கண்டபின்பு தான்
நான் உணர்ந்தேன்
வாய் மட்டுமல்ல
உன் உதடுகளும் உரையாடும் என...
இருந்தாலும் நீ கள்ளி..
பெண்னாக இருந்து பட படவென பழகிவிட்டாய்...
ஆணாக நான் உன்னிடம் அடங்கிப் போனேனடி
அன்பை உன்னை விட அதிகமாய்
உன்னிடம் காட்ட முடியாமல்...!
விட்டாயா...?
குழந்தை போல் என் மடியில் வீழ்ந்தாயே..
அச்சச்சோ...
ஒரு கனம் என்ன செய்வதென்று அறியாது
என் மனம் படபடத்தது உன்மை தான்...
இருந்தும் உன்னை எனக்கு மட்டுமே
சொந்தம் கொண்டாடியது என் உள்ளம்.
கட்டியணைத்துவிட்டேன் கண்ணியே உன்னை..
கைகள் அங்கும் இங்கும் பட்டதாக
சொல்லிச் சிரிப்பாய்...
ம்..ம்.. நானும் புன்னகைக்கின்றேன் அளவின்றி..
கோடி சுகம் கொடுத்தவளே
என்னவளே...
உறக்கம் வருகிறதடி...
இன்னொரு நாள்
வேறொரு சிந்தனையில் சந்திக்கின்றேன்....!
சில நேரங்களில்...
தேகம் தீண்டும் தருனம்
Wednesday, April 2, 2008
சந்தோஷம்
சந்தோஷம் இல்லை பெண்னே..
அதையும் தான்டி
எவ்வளவோ சந்தோஷம்
மறைந்து கிடக்கின்றதே உன் மடியில்...
சற்றே என்னை அரவணைத்து பார்
உன் மார்போடு...
சந்தோஷத்தின் எல்லையை காண்பாய்...
Tuesday, April 1, 2008
சிந்திக்கலாமே...
தாகம் கடந்து கிடைக்கும்
தண்ணீருக்கு
தாகத்தின் அருமை அறிவதில்லை...
காலம் கடந்து கிடைக்கும்
காதலுக்கு
காதலின் புனிதம் புரிவதில்லை...
வயதை தொலைத்துத் தவிக்கும்
மனிதனுக்கோ
மனித வாழ்வே புரிவதில்லை...
என் உயிர் தோழியே
அன்று உன் மனம் சென்றவன்
இன்று
உன்னைப் பிரியாத
உன் உயிராய்..
உன் உடலுக்குள்
உனக்குள்
சொந்தமாகிவிட்டான்..
Friday, March 28, 2008
என்னவளே...
பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!
Monday, March 24, 2008
உன் மூச்சின் வாசனையில்...
உனது விழியிலே
என் கனவு வரைகிறேன்..
எனது கவிதையில்
உன் அழகை பறிக்கிறேன்..
புரியாத கவிதை நீ பூப்பூத்தாய்...
நெஞ்சில் இனந்தெரியாதொரு
வலி கொடுத்தாய்...
சுகமாய் ஸ்வாசிக்கின்றேனடி
உன் மூச்சின் வாசனையில்...!
Monday, March 17, 2008
காத்திருப்பேன்...!
காலங்கள் கரைந்தாலும்...
நேரங்கள் நொருங்கினாலும்...
நாட்கள் விரைவாய் நகர்ந்தாலும்...
நமது நினைவுகளுடன் காத்திருப்பேன்...
என்றும் உனக்காக... !
கண்கள் நிறைய கண்ணீருடன்...
இதயம் நிறைந்த அன்புடன்...
காத்திருப்பேன்...!
நெஞ்சத்தைக் கிள்ளாதே...
உன் முக மலர்ச்சியில் ஆயிரம்
கவிதையை எழுதிட்ட நான்...
உன் அர்த்தமற்ற கோவத்தில்
அர்த்தமற்றுப் போகின்றேன் நான்...