Monday, February 18, 2008

நீ நேசிக்கிறாய்...நான் யோசிக்கிறேன்...

நீ நேசிக்கிறாய்...நான் யோசிக்கிறேன்...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்...
எல்லாம் சமாதியில் அடக்கம்...
ஒன்றுக்குமே உயிர் இல்லை...
என்னை நேசிப்பதை விட்டுவிட்டு...
என்னைப் போல் யோசி...
உணர்வுகள் இருந்தால் நீ சிந்திப்பாய்...
உண்மையான வாழ்க்கையை நீ சந்திப்பாய்...
இல்லையேல் சமாதியில் அடக்கமான - உன்
கவிதைகளை போலவே உன் வாழ்க்கையும்
அர்த்தம் அற்றதாகிவிடும்...

No comments: